1) வெறுப்பு ஆயுதம்
மக்களை ஓரணியில் திரட்ட வெறுப்பு ஒரு எளிய ஆயுதம் . அன்பினால் பெரும் கூட்டம் கூட்டுவது மிகவும் கடினமாகும் .

வெறுப்பு அரசியல் வழிமுறைகள்

1.ஜாதி அரசியல்
2.மொழி அரசியல்
3.இன அரசியல் (திராவிட ஆரிய )
4.வட்டார அரசியல் ( வடக்கு தெற்கு)
5.மத அரசியல்

அண்ணா திராவிட கழகத்தில் இனவெறுப்பு மற்றும் மத வெறுப்பு அரசியலில் பெரியாருடன் இருந்தார் . ஆனால் வெகுஜன மக்களிடம் அது அதிக வெற்றி பெறவில்லை .

அடுத்து அவர் கையில் எடுத்த ஆயுதம் மொழி வெறுப்பு அரசியல் .இந்தி திணிக்கப்படுவதாக பொங்கினார் . தமிழை காக்க வேண்டும் என்று முழங்கினார் . மக்கள் காமராஜரை கைவிட்டு அண்ணாவின் பின்னால் சென்றனர்.

இன்றைக்கு ஆங்கிலம் தமிழை கபளீகரம் செய்து கொண்டு இருக்கிறது . நடுத்தர மக்கள் அனைவரும் ஆங்கில வழி (வலி ) கல்வி முறை பயில்கிறார்கள் . அரசே ஆங்கில வழி முறையை அரசு பள்ளிகளில் தருகிறது

2) கூத்தாடிகள் ஆயுதம்

அரிதாரம் பூசி பேசும் வசனங்களை அப்படியே நம்பியவர்கள் தமிழர்கள் . வில்லனாக நடித்த நம்பியாரை திட்டாதவர்கள் யார் ?

பிரபல நடிகர்கள் மற்றும் வசன கர்த்தாக்கள் மூலம் வெறுப்பு அரசியளை வெகுஜன மக்கள் அறியும்படி செய்தார் .
ஆடுற மட்டை ஆடி கறக்கணும் என்பது போல சினிமா பைத்தியங்களை சினிமா மூலமே பொறி வைத்து பிடித்தார் .
இதன் மூலம் நடிகர் நடிகையிநர் நாடாள சிவப்பு கம்பளம் விரித்தார்

3) ரூபாய்க்கு ரெண்டுபடி – இலவச கவர்ச்சி ஆயுதம்

ரூபாய்க்கு ரெண்டுபடி என்று மக்கள் வரிப்பணத்தில் மூலம் மானியம் அளிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார் . மக்கள் வரிப்பணத்தை எடுத்து மக்களுக்கு கையூட்டு கொடுக்கும் முறையிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார் .
உணவு உற்பத்தியை பெருகி உணவின் விலை குறைப்பேன் என்று சொல்லவில்லை .

இப்படிப்பட்ட மும்முனை தாக்குதலில் காமராஜரை மறந்து கைதட்டினான் தமிழன் . இன்று வரை இந்த மூன்று ஆயுதங்களும் அவனை ஒரு போதையில் வைத்து இருக்கின்றன .