இந்து மதத்தில் ஒருவர் இறந்தால் 16 நாள் தீட்டு . அதாவது 16 நாள் அவருடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கோவிலுக்கு திருவிழாக்களுக்கு விசேஷங்களுக்கு செல்ல கூடாது . இதை மூட நம்பிக்கை என்று கேலி பேசியது ஒரு கூட்டம் .

இப்பொழுது சிந்தித்து பாருங்கள் , கொரோன வைரஸ் போல ஒரு வைரஸ் முன் காலத்தில் பரவி இருக்கலாம் . அப்பொழுதே quarantine என்னும் தனிமை படுத்துதலை அமல் படுத்தி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள் .
இன்றைக்கு 14 நாட்களாக இருக்கிறது அது கூட குத்து மதிப்பான ஒரு நம்பர் தான். ஆக ஒருவர் இறந்தால் வியாதியால் இறந்திருந்தால் அந்த கிருமி மற்றவருக்கு பரவி விட கூடாது என்பதில் மிக சிறப்பாக திட்டமிட்டு மத ரீதியாக அதை ஒரு சடங்காக செய்து நம் சமுதாயத்தை பாதுகாத்திருக்கிறது இந்த பழக்கம் .

உறவினர் அல்லாத மற்றவருக்கு மரணத்திற்கு சென்றவர்கள் கூட குளிக்கும் வரை தீட்டு தான்.
முடி திருத்தினால் குளிக்கும் வரை தீட்டுதான் , இப்படி வியாதிக்காக ஏற்பட்ட பழக்கங்கள் தீண்டாமையாக மாறி இருக்க வாய்ப்பு உள்ளது .

கி மு 160 இல் ரோமில் வந்த பிளேக் 18 வருடங்கள் நீடித்தது . அப்படி இந்தியாவிலும் கொடிய வியாதி பரவி ஒரு தலைமுறையே தீட்டு கடைபிடிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கலாம். அது அப்படியே தீண்டாமையாக மாறி இருக்கலாம் .
வியாதி போன பின்னரும் தூய்மைப்பணியில் சமுதாயத்திற்கு உதவிய நல்ல உள்ளங்களை தீண்டாமையால் கொடுமை செய்து இருக்கலாம் .

இப்பொழுது அறிவியல் காரணங்கள் தெரிந்து விட்டதால், இனியும் தீண்டாமையை செய்பவர் யாரவது இருந்தால் திருந்துங்கள்