குட்டிக்கதை கேளு

கதை மூலமாக அறிவைப் பகிரும் முயற்சி

About

குட்டிக்கதை சொல்லி

தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் மூலமாக அறிவை தேடுகிறார்கள் . அனால் இன்றைக்கோ அறிவு என்பது மறைக்கப்பட்டு கருத்துக்கள் வியாபாராமாக்கப்பட்டு வாசகர்களை மூளை சலவை செய்கிறார்கள்.

உண்மையான கருத்தை பொய் செய்திகளில் இருந்து தேடி எடுப்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது

அடுத்த பிரச்சினை வரலாற்று கண்ணோட்டம் இல்லாமல் , தகிடுதத்த (Fallacy ) விவாத முறைகள் புரியாமல் உண்மை எது பொய் எது என்று புரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்து இருக்கிறது சமூகம்

சினிமா விளையாட்டு காதல் என்னும் உலகத்திலேயே உலகம் புரியாமல் வீட்டில் பூச்சியாய் வாழ்கிறார்கள் .

உண்மை தேடுபவர்களுக்கு தமிழில் சரியான புத்தகங்கள் இல்லை. வினவு போன்ற மூளை சலவை கூட்டங்கள் கடை விரித்து கொஞ்சம் அறிவை தேடுபவர்களையும் மூடர்களாக்குகின்றன .

பொன்னியின் செல்வனில் ஒரு வரி வரும் . “குந்தவை அழகு , அவள் இருக்கும் இடம் சொர்கம் போல உணர்வர் ஆனால் நந்தினி கொள்ளை அழகு , நரகத்தில் உள்ளவரையும் இதுதான் சொர்க்கம் என்று நம்ப வைத்து மகிழ்ச்சியை தருவாள் ” என்று இருக்கும் .

வினவு போன்ற கம்ம்யூனிச விஷ கூட்டங்கள் , விவரம் புரியாதவர்களை, அறிவு பெற்றுவிட்டோம் நமக்கு அரசியல் புரிய ஆரமித்துவிட்டது போன்ற மாயை கொடுக்கும் .

அடுத்து திராவிட அரசியல் கூட்டங்கள் நாத்திகம் பேசி முற்போக்குவாதிகள் போல நடித்து வெறுப்பு நஞ்சை பரப்புகிறார்கள் .

இந்த களேபரங்களுக்கு மத்தியில் உண்மையான சிந்தனையயை சினிமாவில் மூழ்கி சீமானின் உளறலுக்கு கைதட்டும் கூட்டத்திற்கு தர முடியுமா என்று கழிவு அறையில் யோசித்த பொது தோன்றியத்தான் இந்த குட்டிக்கதை முயற்சி

Design a site like this with WordPress.com
Get started