1) பல நுழைவு தேர்வுகள்

நீட் தேர்வுக்கு முன்னாள் ஒருவர் மருத்துவ கல்லூரியில் இடம் பெற ஒவ்வொரு தனியார் கல்லூரியில் ஒரு தேர்வு எழுத வேண்டும் . ஒரு ஏழையினால் இது சாத்தியமா ?

அடுத்து தனியார் கல்லூரிகள் நடுநிலையாக பேப்பரை திருத்தி மருத்துவ சீட்டை ஏழைக்கு கொடுப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா ?

தனியார் கல்லூரியின் அட்மிசன் ட்ரான்ஸ்பரண்டாக ( அனைவரும் தெரிந்துகொள்ளும் படியான ) இருக்கும் என்று
கருதுகிறீர்களா ?

அரசு கல்லூரியில் மட்டும் +2 மதிப்பெண் மூலம் இடம் கிடைக்கும் . ஆனால் மிகவும் குறைந்த அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ளன

2) இரண்டு வருடம் +2

+2 மதிப்பெண் என்பது எந்த அளவில் நடுநிலையானது ?

+1 வகுப்பிலேயே +2 பாடத்தை வைத்து விடுகிறார்கள் தனியார் பள்ளிகள் . பணக்கார மாணவர்கள் இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை படித்து +2 தேர்வு எழுதி மார்க் வாங்குகிறார்கள் . ஏழைகளோ அரசு பள்ளியில் நேர்மையாக +2 வில் +2 பாடத்தை படித்து தேர்வு எழுதுகிறார்கள் .

இப்படிப்பட்ட நிலையில் +2 மார்க் என்பது ஏழைகளுக்கு சமவாய்ப்பு அளிக்கிறது என்பது போன்ற மாயையை உருவாக்குகிறது . பத்திரிக்கைகளும் அப்படிப்பட்ட போலி தோற்றத்தை உருவாக்குகின்றன. ஏனென்றால் கல்லூரிகளின் விளம்பர வருவாயை அவைகள் சார்ந்து உள்ளன .

ஒரு ஏழை வசதி படைத்த மாணவனோடு போட்டி போட்டு
பத்து கல்லூரியில் நுழைவு தேர்வு எழுதுவது இயலாத காரியம்
இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை படித்து +2 தேர்வு எழுதும் திருட்டு தனமும் செய்ய முடியாது

இப்படிப்பட்ட நிலையில் நீட் தேர்வு ஓரளவு சம வாய்ப்பு தளமாக உருவெடுக்கிறது . இதில் ஒரே குறை பணக்கார மாணவர்கள் கோச்சிங் பெறுவது . இதை தமிழக அரசு எளிதில் நிவர்த்தி செய்து ஏழை மாணவர்களுக்கு அரசு சார்பில் கோச்சிங் கொடுக்கலாம் .

3) நீட் தேர்வு சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுவது


நீட் தேர்வு எனது அரசு முடிவெடுத்து அமல்படுத்துவது அல்ல . ஏழை மாணவர்களின் சட்ட போராட்டத்தின் விளைவாக நீதி மன்றத்தின் ஆணையின் மூலமாக சட்டத்தினால் அரசு அமல் படுத்துகிறது .

4) நீட் லாபி


நீட் தேர்வின் காரணமாக தனியார் கல்லூரிகள் தான்தோன்றி தனமாக விரும்பியவருக்கு கொடுத்து நல்ல விலை பெற்று வந்த நிலை மாறி , அட்மிசன் பெறுபவரின் நீட் மார்க் வெளிப்படையாக தெரியும்படி ஆனதால் , நீட் தேர்வை விரும்புவது இல்லை.

இவர்கள் ஏழைகளுக்கு குரல் கொடுப்பது போல மீடியா மூலமாக மக்களை திசை திருப்பி நீட் தேர்வை ஒழிக்க நினைக்கிறார்கள்