குளிர் பிரதேசமான நாட்டிற்கு முதன் முதலில் சென்று இருந்தேன் . அங்கே காய்கறி வாங்க சென்ற பொழுது தக்காளி விலை ஏறத்தாழ வருடம் முழுதும் ஒரே விலையில் விற்பதை கண்டேன் .

தக்காளியே கிடைக்கவில்லை தக்காளி தட்டுப்பாடு என்று அதிக விலை விற்கப்படவில்லை
தக்காளி அபரிமிதமான வளர்ச்சி அதனால் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் அப்படி விட்டு விட்டார்கள் என்கின்ற செய்தியும் அந்த நாட்டில் இல்லை.

இது எப்படி அந்த நாட்டில் சாத்தியம் ?

அடுத்து தக்காளியை அறுவடை செய்ய முடியாமல் தெருவில் எறியும் நிலைக்கு செல்லும் விவசாயிகள் எப்படி அரசாங்கம் கொள்முதல் சிறப்பாக நடைபெறுகிறது அதை மாற்ற வேண்டாம் , தனியார் வேண்டாம் என்று போராடுகிறார்கள் ?

இது எப்படி நம் நாட்டில் சாத்தியம் ?

அமெரிக்க போன்ற நாடுகளில் தனியார் குளிர்பதன கிட்டங்கிகளில் தக்காளியை சேமித்து வைத்து கொள்கிறார்கள் . அதை தனியார் வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன . விவாசியிக்கு கொள்முதல் விலையை முதலே காண்டிராக்டு போட்டு கொள்கிறார்கள் . அவர்களே விற்பதால் எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை முன் கூட்டியே கணக்கிட்டு அதற்கு மட்டுமே காண்டிராக்டு போடுகிரார்கள் அதனால் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு ரோட்டில் கொட்டுவதை தவிர்க்கிறார்கள்.

கொள்முதல் விலை என்பது வால்மார்ட் மற்றும் ஹோல் புட்ஸ் போன்ற பெரு நிறுவனங்களில் யாரோடு வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம் . விலை கட்டுபடியாகாவிட்டால் விவசாயி தக்காளி போடமாட்டார் .
வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் தங்களவாடிக்கையாளர் வேறு கடைக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள் . ஆகவே விவசாயியும் வியாபாரியும் ஒத்துப்போகும் ஒரு கட்டுப்படியாகும் விலையில் தான் வியாபாரம் நடக்கிறது.

இரண்டாவது தக்காளியை ரோட்டில் கொட்டும் நம் விவசாயிகள் ஏன் இப்பொழுது இருக்கும் கட்டமைப்பே போதும் என்று போராடுகிறார்கள் ? அவர்கள் போராடவில்லை ,கோதுமை விவசாயிகள் தான் போராடுகிறார்கள் . விவசாயி என்றால் நாம் எல்லா விவசாயியையும் ஒரே மாதிரி நிலையில் வைத்து பார்க்கிறோம் . கோதுமை விவசாயி வேறு , தக்காளி விவசாயி வேறு .

கோதுமை விவசாயிகளுக்கு மட்டும் தான் குறைந்த பட்ச விலை என்னும் கட்டமைப்பு முறை உள்ளது . அதாவது பஞ்சாபியர்களுக்கு மட்டும் தான் அந்த முறை உள்ளது . அங்கு வருடம் 35000 கோடி ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்கிறது . அதையும் தரகர்கள் மூலமாகவே செய்ய வேண்டும் . 1500 கோடி ரூபாய் தரகர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது .

புதிய சட்டத்தினால் தக்காளி போன்ற காய்கறி விளைவிக்கும் விவசாயிகள் பலன் பெறுவார்கள் . அவர்கள் ஏற்கனவே கட்டமைப்பு இல்லாத தனியாரிடம் தான் விற்கிறார்கள் . கட்டமைப்பு செய்யும் திறமை உள்ள தனியார் வந்தால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுமா என்ன ? தமிழக விவசாயிகள் பலன் பெற வாய்ப்பு உள்ளது . பழைய கட்டமைப்பை அரசு மாற்றம் செய்யவில்லை . ஆகவே கோதுமை விவசாயியும் எந்த நஷ்டத்தையும் அனுபவிக்க போவது இல்லை . பிறகு என்ன பிரச்சினை ?

எதிர்காலத்தில் அரசு கொடுக்கும் தரகு பணம் 1500 கோடி நிறுத்திவிடுவார்களோ என்னும் பயத்தில் , கோதுமை தரகர்கள் விவசாயிகளை தூண்டிவிடுகிறார்கள் .

ஆரோகியா பால் நிறுவனம் தனியார் நிறுவனம் . அவர்களே ஒரு கட்டமைப்பு செய்து விவசாயிகளுக்கு உதவுகிறார்கள் . ஒரு வேளை ஆரோகியா பால் நிறுவனத்திடம் கட்டுப்படியாகும் விலை இல்லையென்றால் அவர்கள் ஆவின் பால் நிறுவனத்திடம் சென்றுவிடுவார்கள் . தனியார் நிறுவனத்தின் கொடுமையை அனுபவித்தே ஆகவேண்டும் என்கின்ற நிலை இல்லை .

கடைசியாக இந்த போராட்டத்தின் ஆதரவு விவாத முறையின் அயோக்கியத்தனத்திற்கு உள்ள பெயர் ” Appeal to emotion Fallacy “
விவாசயிக்கி தெரியாத உண்மை உனக்கு தெரியுமா ?
விவசாயி தாண்டா எல்லாம் என்று விவாதத்தில் உண்மையை மூடி முடிப்பார்கள்