சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் வரும் . கோபிநாத் மல்லையாவை பார்த்து “நாங்க சோசியலிஸ்ட் நீங்கள் சோசியல் எலீட்” என்று கூறுவார் . இந்த வசனத்தின் உள்குத்து என்ன என்பதை பார்ப்போமா!

சோசியலிசம் என்பது அரசாங்கமே நிறுவனம் நடத்தி, ஏழைகள் பலன் பெற லாபம் குறைத்து மக்களுக்காக நடை பெரும் அரசு நிறுவனம் மட்டுமே இருக்கும்படியான அமைப்பு . அதில் தனியாருக்கு இடம் இல்லை

அப்படி என்றால் ஏர் இந்தியா அப்போதைய சோசியலிச நிறுவனம், உண்மையில் அதுதான் மக்கள் பலன் பெற குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி இருக்க வேண்டும் ? அனால் உண்மையில் அப்படி நிகழவில்லை . ஏனென்றால் அரசு நிறுவனம் என்பது எப்போதும் ஒரு வெள்ளை யானை தான் . அதனால் எளியவர்கள் மிக அரிதாக பலன் பெறுவார்கள் .

லாப நோக்கில் பிற நிறுவனங்களின் போட்டியால் மட்டுமே விலை குறைந்து ஏழை நடுத்தர மக்கள் பல பெற்றுள்ளார்கள் . இது கேபிடலிச அமைப்பு முறையில் தான் சாத்தியம்.

நேருவின் சோசியலிச அரசாங்கத்தால் டாட்டா அலைக்கழிக்கப்பட்டார் . அவரது விமான நிறுவனத்தையும் அயோக்கியன் நேரு திடீரென சட்டத்தின் மூலம் பறித்து கொண்டார் . சோசியலிசம் குழி தோண்டி புதைக்கப்பட்ட வேண்டிய ஒரு அமைப்பு .
ஆனாலும் அப்படி தோல்வி அடைந்த சித்தாந்தத்தை லாவகமாக முட்டாள் தமிழக மக்களுக்கு, நன்மை செய்யும் அமைப்பாக காட்டி இருக்கிறார் அயோக்கிய டைரக்டர் .

கேப்டன் கோபிநாத் லாப நோக்கில் தான் நிறுவனம் நடத்தினார் . வெற்றியும் பெற்றார்

கேப்டன் கோபிநாத் போல மக்களுக்கு சேவையில் மூலம் லாபம் செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள் . கீழே சில உதாரணங்கள் ..

ஹென்றி போர்டு:
பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்திய கார் எளியவர்களை சென்று சேரும்படி செய்தார். இவரை சோசியலிஸ்ட் என்று கூறாமல் கார்ப்பரேட் கொள்ளைக்காரன் என்பார்கள்

நேருவின் லைசென்சு ராஜ் முறையில் கார் தயாரிக்கும் லைசென்ஸை ஜீ டீ நாயுடு பெற முடியாமல் கார் நிறுவனமே அமைக்க முடியவில்லை .
அடுத்து யாருக்கும் கார் உற்பத்தி லைசென்சு தராமல் அம்பாசிடர் கார் கம்பெனிக்கு மட்டும் அனுமதி கொடுத்து பணக்காரர்கள் மட்டும் பலன் பெற உதயவியது சோசியலிசம்.

முகேஷ் அம்பானி
4G தொழில் நுட்பத்தை எளியவர்களுக்கு சென்று சேர்த்தவர் , இணையம் என்பதையே பல கிராமங்களுக்கு சென்று சேர்த்தவர் . பாண்டமிக் காலத்தில் இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்பை காத்தவர் .இவரை சோசியலிஸ்ட் என்று கூறாமல் கார்ப்பரேட் கொள்ளைக்காரன் என்பார்கள்!

சோசியலிச நிறுவனமான பி எஸ் ஏன் எல் டெலிபோன் கனெக்சன் கொடுக்க ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும் . அரசு அதிகாரிகள் எந்த அவசரமும் இன்றி பொறுமையாக வேலை செய்து வாழ்க்கையை அனுபவித்தார்கள்.

இந்த சோசியலிஸ்ட் வசனத்தின் அயோக்கியத்தனத்திற்கு “False Analogy Fallacy ” என்று பெயர் . மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போட்டு பொய்யான முடிவுரை மூலமாக மக்களை ஏமாற்றுவது . கம்யூனிஸ்டு பொய்யர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்