ஒரு ஊரில் அழகான பெண் ஒருத்தி இருந்தாள் .அந்த ஊரின் வாலிபர்களிடம் வெளியூரில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் , அந்த பெண்ணை நாம் ஏன் பலவந்தமாக அடைய கூடாது என்று கேட்கிறார் ?

அந்த ஊரின் வாலிபர்களோ , அது தவறு என்று கூறாமல் , தாங்களும் சேர்ந்து அடைய ஆவல் தெரிவித்தனர் .

ஒரு திருவிழா நாளில் அந்த பெண்ணை வல்லுறவு செய்தனர் .

இந்த சம்பவம் அந்த ஊரின் பெரியார் முன்னாள் தீர்ப்பிற்காக வந்தது .

“இந்த அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி தவறான வழி காட்டிய வெளியூர்காரனுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் , பாதிக்கப்பட்ட உள்ளூர் இளைஞர்கள் இனி திருந்தி வாழ வேண்டும் “
என்று தீர்ப்பு கூறினார்.

வெளியூர்காரானை அடித்து துரத்திவிட்டனர் . வெளியூர் நபர் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது .
மீண்டும் ஒரு கற்பழிப்பு சம்பவம் நடந்தது . அதே இளைஞர்கள் தான் அந்த தவறை செய்திருந்தனர் .

ஊர் சபை கூடியது . பெரியார் வந்தார்

“இந்த அப்பாவி இளைஞர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாள் வந்த வெளியூர்காரனால் பாதிக்கப்பட்டவர்கள் , அந்த வெளியூர்காரன் தான் அணைத்து தவறுகளுக்கும் காரணம் . அப்பாவி இளைஞர்களுக்கு தையல் இயந்திரம் கொடுத்து வாழ்க்கையை மறுசீரமைப்போம் ” என்று தீர்ப்பு கூறினார் .

புரியாதவர்களுக்கு :
வெளியூர்காரன் : பிராமிணர்கள்
உள்ளூர் வாலிபர்கள் : ஆதிக்கசாதிகள்
பெண்கள் : ஒடுக்கப்பட்ட சாதிகள்
தையல் இயந்திரம் : இட ஒதுக்கீடு