இரண்டு கிராமங்கள் அருகருகே இருந்தன . ஒரு கிராமத்தில் யார் வேண்டுமானாலும் விரும்பிய தொழில் செய்யலாம் . இன்னொரு கிராமத்தில் கிராமத்து தலைவர் அனுமதி கொடுத்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும் .

இரண்டு கிராமத்திலும் மக்கள் பொது கிணறில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் எடுத்து செல்ல சிரம பட்டார்கள் .
முதல் கிராமத்தில் தொழில் முனைவர் ஒருவர் மாட்டு வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து வீட்டிற்கு உள்ளேயே கொண்டு வந்து கொடுத்தார் . அதற்காக ஒரு கூலியையும் பெற்றுக்கொண்டார் . அதை பார்த்து இன்னும் பலர் அந்த தொழில் செய்ய முன் வந்தார்கள் . பல வண்டிகள் ஊருக்குள் நீர் விநியோகம் செய்தன.

இரண்டாம் கிராமத்தில் , ஊர் தலைவர் கிணற்று நீர் எடுக்க அனுமதி மறுத்தார் . முதலாளிகள் ஊர் மக்களை சுரண்டி அதிக விலை பெற்றுவிடுவார்கள் என்று காரணம் கூறினார் . அது மட்டும் அல்ல , கூலி கொடுக்க முடியாத ஏழைகள் என்ன செய்வார்கள் என்று கூறி மக்களை ஏற்று கொள்ள வைத்தார் .

நாட்கள் உருண்டோடின , பத்து வருடங்கள் கடந்தன . ஊர் தலைவர் மகன் ராஜன் தலைவனான் . அவர் பொது கிணறில் தண்ணீர் எடுக்க கிராமத்தின் நிருவாகத்தில் ஒரு நிறுவனத்தை அமைத்து , அந்த நிறுவனம் குறைந்த விலையில் வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து வீட்டிற்கே தரும் என்று கூறினான் .

ஒரே ஒரு வண்டி மட்டும் வாங்கினார்கள் . அந்த வண்டிக்காரன் பணக்காரர்களிடம் காசு வாணங்கி கொண்டு அவர்களுக்கு மட்டும் விநியோகம் செய்தான் . மற்றவர்களுக்கு உங்கள் முறை வரும் வரை காத்திருங்கள் , இன்னும் பல வண்டிகள் வாங்கி உங்கள் தேவையை ஊர் தலைவர் நிறைவேற்றுவார் என்கிறார் . மக்களும் வண்டிகள் வாங்குவதர்காக இன்னும் ஒரு பத்து வருடங்கள் காத்திருந்தார்கள் . காத்து கொண்டே இருந்தார்கள் .

நாட்கள் உருண்டோடின , இருபது வருடங்கள் கடந்தன . பழைய ஊர் தலைவரின் நண்பர்கள் கூறினார்கள், ராஜன் தான் தொலை நோக்கு தலைவர் . அவர் மட்டும் இல்லையென்றால் நாம் இன்னும் குடத்தில் நீர் சேந்தி இருந்துகொண்டு இருப்போம் . ஆகவே ராஜன் மகனை நாம் தலைவராக்குவோம் என்கிறார்கள் .

இப்பொழுது நீங்கள் கூறுங்கள் ..
1) இரண்டாம் கிராமத்தில் யாரும் தொழில் தொடங்க கூடாது என்று மக்களை வதைத்தவர் நல்லவரா ?
2) முதல் கிராமத்து மக்களின் சொகுசு வாழ்க்கையை பத்து வருடங்கள் தள்ளி அறிமுகப்படுத்திய ராஜன் தொலைநோக்கு பார்வையாளரா ?
3) பெயருக்கு ஒரே ஒரு வண்டி வைத்து கொண்டு லஞ்சம் பெற்று செய்த சேவை நல்ல சேவையா ?

ஆனாலும் ராஜீவ் காந்தி டெலிபோன் கொண்டுவரவில்லை என்றால் தகவல் தொழில் நுட்ப புரட்சி வந்திருக்காது , அவர் நல்ல தலைவர் என்கின்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா ?